ஆழி பதிப்பகம் தனது மிக முக்கியமான நூல்களின் மூலமாக தமிழ் வாசகப் பரப்பின் மீது மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்தின் மீதே தன் அழுத்தமானப் பதிவுகளைச் செய்துவருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகள் நேரடியான பதிப்புச் செயல்பாடுகளைத் தாண்டி ஆழி மேற்கொண்ட சில செயல்பாடுகளால், பதிப்பகத்தின் கனவுகள் சில நனவாகும் நிலைக்கு நகர்ந்திருக்கின்றன. ஆழியின் சகோதர அமைப்பான பேரலை வலைக்காட்சியோடு இணைந்து காட்சியூடகத்திலும் ஆழி விரைவில் பயணிக்கவுள்ளது. அந்த வகையில், வாசகர்களோடு தொடர்ந்து உறவில் இருப்பதற்காக தன் சமூக ஊடகச் செயல்பாடுகளையும் அதிகரிக்கிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த மின்மடல் ‘ஆழியின் சொற்கள்’!
மின்மடலைத் தொடர்ந்து வாசிக்க இணைப்பில் [aazhi.substack.com] உங்கள் மின்னஞ்சலைப் பதிவிடுங்கள்; பகிர்ந்திடுங்கள்!